மஞ்சூர், மார்ச் 19: மஞ்சூர் பஜாரில் காட்டு மாடு திடீரென நகர் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சூர் பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. அவ்வப்போது சிறுத்தைகளும் திடிர் விஜயம் செய்து பஜார் பகுதியில் கடைகளின் முன்பு படுத்து கொண்டிருக்கும் தெருநாய்களை கொன்று துாக்கி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மேல்மஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துத்தும் மிகுதியாக காணப்பட்டது.
