ஓய்வூதிய நலச்சங்கத்தினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: அனைத்து இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து இபிஎப் ஓய்வூதியர்களுக்கும் உயர்ந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு அறிவிக்கும் பஞ்சப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நீலகிரி மாவட்ட இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏடிசி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இபிஎப் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், எஸ்பிடி மாவட்ட தலைவர் ஆப்ரஹாம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார் ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நிர்வாகி சுப்பிரமணி நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Related Stories: