நீலகிரி எம்பி நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைப்பு

குன்னூர்: நீலகிரி எம்பி நிதியில் இருந்து சாகாயமாத மருத்துவமனை முதல் முதியோர் இல்லத்திற்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு மேம்பாட்டுபணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக  நடைப்பாதை, குடிநீர், தெரு விளக்கு மற்றும் கழிவு நீர் கால்வாய் என பல்வேறு பணிகளை வார்டு உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் நகராட்சிக்குட்பட்ட சகாய மாத மருத்துவமனை அருகே உள்ள முதியோர் இல்லத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது காணப்பட்டது ‌. முதியோர் இல்லத்திற்கு சென்று வர கடும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து அப்பகுதி திமுகவினரிடம் முறையிட்டனர். நீலகிரி எம்பி நிதியியல் இருந்து சகாயமாதா மருத்துவமனை முதல் முதியோர் இல்லத்திற்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியை நகர மன்ற துணை தலைவர் வாசிம் ராஜா மற்றும் நகர மன்ற உறுப்பினர் சையது மன்சூர் துவங்கி வைத்தனர். உடன் நகராட்சி இளநிலை பொறியாளர் அறிவழகன் ஒப்பந்ததாரர் முகமது முனாப் அப்பகுதி கிளை செயலாளர் லியாகத் அலி, பழனி, அழகு, நடனம்,  தாயுமானவன், சேகர், மணிமேகலை,முருகேஷ், சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: