கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு

கோத்தகிரி, மார்ச் 7:  கோத்தகிரி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணியினை பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். கோத்தகிரியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோத்தகிரி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தடுப்பு பிரிவு கட்டிடம் கட்டும் பணியானது ரூ.3.03 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.

ஊட்டி உள்ள மருத்துவ கல்லூரியை ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில், கோத்தகிரி வழியாக தனது பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு கோத்தகிரியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கட்டிடம் கட்டும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். இதில் கட்டிடப்பணி தற்போது எந்த அளவிற்கு நடைபெற்று வருகிறது, உறுதியான கலவை, இடுபொருட்கள் கொண்டு கட்டப்பட்டு வருகிறதா ? சிமெண்ட், மணல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தரைத் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் கட்டிடத்தின் நீளம், அகலம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதன்மை பொறியாளர் இளஞ்செழியன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியவாகேஷ்வரன், நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறை மாவட்ட பொறியாளர் குழந்தைராஜ், கோட்ட பொறியாளர் சாமியப்பன்,செயற்பொறியாளர் ஐய்யாசாமி, உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, கோத்தகிரி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சம்பத்குமார், கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், ஆல்வின், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்திரி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: