5 ேபரை கடித்து குதறிய வெறிநாய் செங்கத்தில் பரபரப்பு

செங்கம், மார்ச் 2: செங்கம் டவுனில் 5 பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் டவுன் மேலப்பாளையத்தில் நேற்று காலை தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த வெறிநாய் ஒன்று அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி விரட்டி குடித்து குதறியது. இதில், 5 பேர் ரத்த காயங்களுடன் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த பேருராட்சி பணியாளர்கள் வெறி நாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். செங்கம் நகரில் முக்கிய வீதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இந்த வெறி நாய்களை பிடித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: