அண்ணாமலையார் கோயிலில் மகா அபிஷேகம் வைகாசி அமாவாசை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஜூன் 6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வைகாசி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அமாவாசை தினத்தன்று, கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, வைகாசி அமாவாசை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திக்கு மகா அபிேஷகம் நடந்தது. அப்போது, சுவாமிக்கு மூலிகை பொடிகள், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், இளநீர், மலர்கள் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், நேற்று மாலை சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

The post அண்ணாமலையார் கோயிலில் மகா அபிஷேகம் வைகாசி அமாவாசை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: