இடைத்தரகரின்றி அறுவடை இயந்திரங்கள் பெறலாம் கலெக்டர் தகவல் பெரம்பலூர், சேலத்தை கலக்கிய பிரபல பைக் கொள்ளையர்கள் 2 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் மிரட்டியும், பூட்டை உடைத்தும் பைக் திருடும் பிரபல பைக் கொள்ளையர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 4-பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் நகராட்சி, ரோவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு(41). இவர் பெரம்பலூர் காமராஜர் வளைவுப் பகுதியில் கடந்த 8 வருடங்களாக டிஜிட்டல் மொபைல் என்ற பெயரில் மொபைல் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் நேற்று (26ம் தேதி) காலை 9.30 மணி அளவில் தனது கடையில் வேலை செய்யும் பிரதீப் என்பவருடன் தனது ஹோண்டா ஆக்டிவா சிவப்பு கலர் பைக்கில் எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் கடையை திறக்க சென்றுள்ளார்.

அப்போது எளம்பலூர் சாலையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் உதவி கேட்பது போல் பிரபுவின் பைக்கை வழிமறித்து பணம் கெட்டு மிரட்டியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்த பிரபுவிடன் நாங்கள் ரவுடிகள், எங்கள து பெயரை சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். பணம் இல்லை என்று எப் படி கூறுவாய் என கழுத் தில் கத்தியை வைத்து மிர ட்டி உள்ளனர். இதனால் பயந்து போன பிரபு தன் கடை ஊழியர் பிரதிப்பை கீழே இறக்கிவிட்டுள்ளார். பிரபுவின் கழுத்தில் கத்திய வைத்துக்கொண்டு அவரது பாக்கெட்டில் வைத்திருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஒன்றை பறித் துக் கொண்ட மர்மநபர்கள் பின்னர் பிரபுவையும் கீழே இறக்கிவிட்டு அவரது பை க்கை பிடுங்கிக் கொண்டு வடக்கே எளம்பலூர் சாலை யில் சென்று தப்பிச் சென் று விட்டனர்.

இது தொடர் பாக பிரபு கொடுத்த புகா ரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் எஸ்எஸ்ஐ கிருஷ்ணமூர் த்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய பைக் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சென்ற இருவரை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்களில் ஒருவன் பெரம்பலூர் மேரிபுரம் ராஜேந்திரன் மகன் ஹரிஹரன் (47) என்பதுவும், மற்றொருவன் சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, ஒண்டிக்கடை அருகே உள்ள முண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ராமன் மகன் ரமேஷ் என்கிற கருணாகரன்(40) என்பதும், இவர்கள்தான் காமராஜர் வளைவு சாலையில் மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துக் கொண்டு தலை மறைவானவர்கள் என்பதும் தெரியவந்தது.  அவர்களிடம் தொடர்ந் து நடத்திய விசாரணையில் அவர்கள் பிரபல பைக் திருடர்கள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா, கொ ரக்கவாடி கிராமத்தை சேர் ந்த சக்திவேல், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, பெர ம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் பணி புரியும் பெண் மருத்துவர் யாழினி ஆகிய 3பேர்களது இருசக்கர வாகனங்களை திருடியது இவர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட ஹ ரிஹரன், ரமேஷ் என்கிற கருணாகரன் ஆகியோர், மிரட்டியும் பூட்டை உடைத்தும் திருடிவைத்திருந்த 4 பைக்குகள் பறிமுதல் செய் யப்பட்டு இருவரும் பெரம்ப லூர் குற்றவியல் நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெரம்பலூர் நகரில் மட்டுமின்றி சேலம் மாவட்டத்திலும் கைவரிசை காட்டி பைக்குகளை திட்டமிட்டு திருடி வரும் கொள்ளையர் இருவரை லாபமாக மடக்கி பிடித்த பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளி ட்ட போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Related Stories: