நான் முதல்வண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பந்தலூர், பிப்.22:  பந்தலூரில் நான் முதல்வண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தலூர் அருகே நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி மற்றும் அறிவுசார் வாழ்க்கை திறன்கள் பற்றி வழிக்காட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளுக்கு சென்று நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் முத்துக்குமார், ராஜன்,பைசி,ராகுல்,அபிசேக் மற்றும் ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 12ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் உயர் கல்வி பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை  பெறுவதற்கு போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி  தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: