வெள்ளத்தில் மிதக்கும் வீட்டை கண்டுபிடித்த விருதுநகர் மாணவி விஷாலினிக்கு பால சக்தி புரஸ்கார் விருது வழங்கல்

விருதுநகர், பிப்.21: விருதுநகர் மாணவிக்கு பால சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருமண உதவித்தொகை கோரி மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் ஒன்றிய அரசால் கலை, கல்வி, கலாச்சாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி சமூக சேவை மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் விருதுநகரை சேர்ந்த நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள் செல்வி விஷாலினி ஐதராபாத்தில் உள்ள அத்தாப்பூர் டெல்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில் படித்து வருகிறார். இவர் வெள்ள பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் வகையில் வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர்காக்கும் வீட்டை கண்டுபிடித்துள்ளார்.

 கடந்த 24.1.2022ல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பிரதமர் மோடி, பால சக்தி புரஸ்கார் விருது மற்றும் ஒரு லட்சம் பரிசுத்தொகையை காணொலி காட்சி மூலம் செல்வி விசாலினிக்கு வழங்கினார். அதை தொடர்ந்து ஒன்றிய அரசு பால சக்தி புரஸ்கார் விருதிற்கான பதக்கம், கைக்கடிகாரம், டேப் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள், விருதிற்கான சான்றிதழ் ஒன்றிய அரசின் மூலம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. கலெக்டர் ஜெயசீலன், செல்வி விசாலினிக்கு வழங்கினார்.  நிகழச்சியில் டிஆர்ஓ ரவிக்குமார், நேர்முக உதவியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: