சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்

ஊட்டி, அக். 1:ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வு குழுவின் 2021-2023ம் ஆண்டிற்கான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவர் ராேஜந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை குறிப்பாணைகள் மீதான ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அசோகன், செந்தில்குமார், சேகர், பரந்தாமன், ேஜாதி மற்றும் சட்டமன்ற பேரவை துணை செயலாளர், சட்டத்துறை துணை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: