அரசு மீன் பண்ணையில் திருட்டு

தேவதானப்பட்டி, செப். 30:  தேவதானப்பட்டி அருகே, மஞ்சளாறு அணையில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் பண்ணையில், திலேப்பியா வகையைச் சேர்ந்த சுமார் 300 தாய் மீன்கள் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தாய் மீன்களை நேற்று முன்தினம் மீன்வள ஆய்வாளர் அண்ணாதுரை ஆய்வு செய்துள்ளார். அப்போது 157 தாய் மீன்கள் காணவில்லை.

இது குறித்து மஞ்சளாறு அணை கிராமத்தில் விசாரித்தில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பாண்டி என்ற கூலு என்பவர், இந்த திலேப்பியா தாய் மீன்களை திருடி விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இது குறித்து மீன்வள ஆய்வாளர் அண்ணாதுரை தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: