குமணன்தொழுவில் சித்தர் குடில் திறப்பு விழா

வருசநாடு, செப். 30: கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் குருபாதம் அறக்கட்டளை சார்பில் இடைக்காட்டு சித்தர் குடில் திறப்பு விழா நேற்று நடந்தது. வெள்ளையங்கிரி சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து சித்தர் குடிலை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆசிரமத்தில் தனுஷ் அடிகளார், ராஜரிஷி ஆதிமூலனார், வீரசேகர், தியான குரு, சிவயோகி ஆனந்தி அம்மா, உதயகிரி சுவாமி அடிகளார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரம பொறுப்பாளர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமானந்தன், கிராம முக்கியஸ்தர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: