மாரியம்மன் கோயில் விழாவில் பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலம்

திருவாடானை,செப்.29: திருவாடானை ஓரியூர் சாலையில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் கடந்த 19ம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 1008 பூத்தட்டுகள் எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Related Stories: