நீலகிரியில் திமுக முப்பெரும் விழா

ஊட்டி, செப். 28:  வரும் 28, 29ம் தேதிகளில் நீலகிரியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் எம்.பி. ஆ.ராசா பங்கேற்கிறார். நீலகிரி மாவட்டத்தில் திமுக., முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பில்லன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் வரவேற்றார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் கடந்த 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது. இதில், மூத்த முன்னோடிகளுக்கு அண்ணா, கலைஞர், பேராசியர், பாரதிதாசன் ஆகிய தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கியும், சிறப்பாக பணியாற்றிய நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டத்திலும் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளாக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூரில் முப்பெரும் விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் தொடந்து நடைபெற்று வருகிறது.  

இதன் தொடர்ச்சியாக திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வரும் 28ம் தேதி ஊட்டி மற்றும் குன்னூரில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வரும் 29ம் தேதி கூடலூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல உள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகை தரும் ராகுல்காந்தியை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வரவேற்கிறார். 28ம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் குன்னூர் அண்ணா சிலை அருகில் அண்ணா சிலைக்கு ஆராசா மாலை அணிவிக்கிறார். குன்னூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் நடைபெறும் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து மதியம் 1 மணியளவில் ஊட்டி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியிலும் நடைபெறும் கொடியேற்று விழா நிகழ்ச்சியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியையும் துவக்கி வைக்கிறார்.

மதியம் 3 மணியளவில் ஊட்டி முகாம் அலுவலகத்தில் மாவட்டத்திலுள்ள தோழமை கட்சி தலைவர்களை சந்திக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் குன்னூர் மற்றும் ஊட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்திலுள்ள தலைமை கழக நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல் வீரர்கள், முன்னணினர் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து சிறப்பிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், விஜயாமணிகண்டன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாறில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன் பாபு, சேகரன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், லாரன்ஸ், காமராஜ், பிரேம்குமார். நெல்லைகண்ணன், சிவானந்தராஜா, சுஜேஷ், பீமன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: