தா.பழூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு குறித்து ஆலோசனை

தா.பழூர், செப். 28: அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் கூட்டரங்கில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கிராம ஊராட்சி சார்பில் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சியிலும் உள்ள தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியை வளர்ச்சி அடைவதற்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கினர். இந்த கூட்டம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், சத்துணவு மேலாளர் மலர் கண்ணன் மற்றும் பயிற்றுனர்கள் கீதா, சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 33 ஊராட்சிகளிலும் இருந்து தலைவர், துணை தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: