ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் விவசாயிகளிடம் இருந்து என்னென்ன பொருள் கொள்முதல் செய்ய வேண்டும்

தா.பழூர், செப்.28: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் 2021 ஆண்டு தொடங்கப்பட்ட கீழ் கொள்ளிடம் உழவர் உற்பத்தியார் நிறுவனத்தின் ஆண்டு பொது குழு கூட்டம் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு நீர்பாசன நவீனமயமாக்குதல் திட்டத்திம் மற்றும் அரியலூர் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்படும் கீழ் கொள்ளிடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அரியலூர் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் துணை இயக்குநர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் , தோட்டக்கலை துறை, நீர்வளத்துறை ,கால்நடை துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி கூறினர்.

வேளாண் அலுவலர் கார்த்தி, கிராண்ட் தார்ண்டன் ஆதார நிறுவனத்தின் அணி தலைவர் மற்றும் ஆலோசகர் தாமோதரன், விற்பனை நிர்வாகி திருஞானம், எக்ஸிகியூட்டி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக தா.பழூர் தலைவர் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிறுவனத்தின் இயக்குநர்கள் மருதமுத்து, ராமச்சந்திரன், எழிலரசன், வீராசாமி, ராகுல் மற்றும் பங்கு தாரர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆண்டு பொது குழு கூட்டத்தில் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மதுசூதனன் ஆண்டு தணிக்கை அறிக்கையை வாசித்து சமர்பித்தார். இதில் இந்த நிறுவனத்தின் மூலம் 27 டன் நிலக்கடலை மற்றும் 15 டன்க்கு மேலாக விதை நெல் வாங்கி விவசாயிகளுக்கு ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். மேலும் இந்த ஆண்டு என்னென்ன விளைப்பொருட்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வது, புதிதாக பங்கு தாரர்களை இணைப்பது போன்றவை தீர்மானங்களாக ஆண்டு பொது குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: