பாம்பு கடித்து பெண் பலி

அலங்காநல்லூர், செப். 27: மதுரை பாலமேடு ராம் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (37). சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் சோள நாற்றுகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று இவரை கடித்து விட்டது.

ஆபத்தான நிலையில் இருந்த முருகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: