காட்டு மாடு தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்

கோத்தகிரி,செப்.23: கீழ் கோத்தகிரி அருகேயுள்ள கெங்கரை கோவில் மட்டம் பகுதியில் வசித்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளியான  கிருஷ்ணகுமாரி (31) என்பவர் தேயிலை தோட்டத்தில் பணி செய்து விட்டு நேற்று மதிய உணவிற்காக வீட்டிற்கு வரும் போது தேயிலை தோட்டத்தில் இருந்து காட்டுமாடுகள் கூட்டம் சாலை கடந்து சென்றுள்ளது.அப்போது சாலையை கடந்து சென்ற காட்டு மாடு கூட்டத்தில் ஒரு காட்டு மாடு மட்டும்  சாலையை கடந்து செல்லாமல் தேயிலை தோட்டத்தில் மறைவாக இருந்துள்ளது. இதையறியாத கிருஷ்ணகுமாரி அனைத்தும் சாலையை கடந்து சென்றுவிட்டதாக நினைத்து சாலையில் நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக தேயிலை தோட்டத்தில் மறைவாக நின்று காட்டுமாடு திடீரென சாலையை கடந்து செல்வதற்காக வந்தபோது திடீரென கிருஷ்ணகுமாரியை தாக்கியது. இதில் இடது காலில் பலத்த காயமடைந்து. வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமாரி அலறவே, அக்கம்பக்கத்தினர் உடனே இவரை மீட்டு கீழ்கோத்தகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் கூறாய்வு செய்யப்படும் உடல்கள் விரைவில் அடக்கம் செய்ய வேண்டிய சூழலில் மின் மாயனம் இருந்தால் பொதுமக்கள் இறந்தவர்களை எரியூட்டுவதற்கு மின்மயானத்தை பயன்படுத்த எளிமையாக அமையும்.

Related Stories: