நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

ஊட்டி, ஏப். 18: நீலகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார்.

மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகளின் மூலம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்களுக்கு 20 சதவீதம் கூடுதல் என 1174 வாக்குசாவடி அலுவலர்களும், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 224 வாக்குசாவடி மையங்களுக்கு 1108 வாக்குசாவடி அலுவலர்களும், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1109 அலுவலர்கள் என மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிளுக்கு உட்பட்ட 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் 20 சதவீதம் என 3391 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி தொகுதிக்கு 23 நுண் பார்வையாளர்களுக்கும், கூடலூர் தொகுதிக்கு 67 நுண் பார்வையாளர்களுக்கும், குன்னூர் தொகுதிக்கு 37 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 127 நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டது. முன்னதாக 3 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் 461 வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறையில் இருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா பார்வையிட்டார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆர்டிஓ-க்கள் மகராஜ், சதீஷ், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட பலர் உள்ளனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: