கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்

கோத்தகிரி, ஏப்.25: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கிய நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் தலைமையில் பூங்கா பராமரிப்பு பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்றது. பூங்காவில் சுற்றுச்சுவர், அனுமதி சீட்டு வழங்கும் கட்டிடம், பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்று தற்போது நேரு பூங்கா புதுப்பொலிவு பெற்று உள்ளது. மேலும், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் புல் தரைகள், சிறுவர்கள் பொழுதுபோக்கு உபகரணங்கள் அனைத்தும் சிரமைக்கப்பட்டு பூங்காவானது புத்துயிர் பெற்றுள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் சுற்றுலா நினைவுகளை நினைவு படுத்தும் வகையில் சிறப்பு புகைப்படங்கள் மற்றும் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ நம்ம கோத்தகிரி, ஐ லவ் கோத்தகிரி, பறவையின் சிறகு போன்ற வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது.

பூங்காவில் உள்ள நீர் ஊற்று நடைப்பாதை உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்படு உள்ளது.
மேலும், சமவெளிப்பகுதிகளில் நிலவும் வெயிலை சமாளிக் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிவதையொட்டி பூங்கா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களின் சுற்றுலாவை அனுபவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பூங்கா ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார் appeared first on Dinakaran.

Related Stories: