போலி ஆவணங்களுடன் சொத்து அபகரிக்க முயற்சி

கோவை செப்.22: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (31). தபால் அலுவலக ஊழியர். இவரது தந்தைக்கு 2 மனைவிகள் உள்ளனர். தந்தை முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. கடந்த 2016ம் ஆண்டு ராஜபாண்டியனின் தந்தை செல்வராஜ் இறந்துவிட்டார். அவர் இறந்த பின்னர் முதல் மனைவி சுந்தராம்பாள் (60) மற்றும் அவரது மகன்கள் சிவக்குமார், சதீஷ்குமார்,  மகள் நாகநந்தினி , மருமகன் வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து போலியான அரசு ஆவணங்கள், தாசில்தார் கையெழுத்து போட்ட சான்று, வாரிசு சான்று போன்றவற்றை தயாரித்து பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள செல்வராஜ்க்கு சொந்தமான இடம், 2 வீடுகளை விற்க முயன்று உள்ளனர்.

மேலும் 2வது மனைவியின் பெயரில் இருந்த 5 பவுன் தங்க நகையை போலி ஆவணங்கள் காட்டி வங்கியிலிருந்து எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக 2வது மனைவியின் மகனான ராஜபாண்டியன் கொடுத்த  புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: