இந்திய சுரங்கப்பாதுகாப்புத்துறை இயக்குநர் பேச்சு

அரியலூர்,செப்.20: கனிம சுரங்கங்களில் நிகழும் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்வது அவசியம் என இந்திய சுரங்கப் பாதுகாப்புத்துறை தலைமை இயக்குநர் ப்ரபாத்குமார் கூறினார். அரியலூர் ராம்கோ சிமென்ட் ஆலையில், தமிழ்நாடு சுரங்கப் பாதுகாப்பு குழுமம் சார்பில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியதாவது: நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொழில்துறை, கனிம, சுரங்கத் துறைகள் வளர்ச்சி மூலகாரணமாகும். சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்துகள் இன்றி மேலும் பாதுகாப்புடன் பணிபுரிவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதனால் உற்பத்தித் திறன் பெருகி வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வை வளர்ப்பது நிர்வாகத்தின் தலையாய கடமையாகும்.

தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிலாளர்கள் நலன் சார்ந்து அவர்கள் வாழ்க்கை உயர, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொழில் நிறுவனங்கள் செல்படுத்த வேண்டும்t. தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் பாதுகாப்பு விழிப்புணர்வுகள் இருந்தாலும், சுரங்கத் துறையில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுரங்கத்தில் நிகழ்வும் நிகழ்வுகளை உடனுக்குடன் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.

இது குறித்து தொழிலாளர்களிடமிருந்து ஆலோசனை இயக்குநரகம் வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இவ்விழாவில், சுரங்கப்பாறை துணை தலைமை இயக்குநர் மலேய்திகாதர், சென்னை மண்டல சுரங்கப் பாதுகாப்பு துறை இயக்குநர் ரெகுபதி பெட்டிரெட்டி, இணை இயக்குநர் மகேஷ் சட்லா, ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கட்ராமராஜா, முதன்மை நிர்வாக அலுவலர் தர்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: