சீர்காழி, செப்.13: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காழி ஸ்ரீ ராம விண்ணகரம், ஸ்ரீ திருவிக்ரம பெருமாள் என அழைக்கப் படும் தாடாளன் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசத்தலங்களில் 28வது ஸ்தலமாக அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் பவித்திர உற்சவம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடை பெற்றன.