இலவச மனை பட்டா கோரி ஆட்சியரிடம் விசிக மனு

கடலூர் , செப். 13:  கடலூரில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் 161 பேருக்கு இலவச மனை பட்டாவும், கீழ் அய்வனூர் கிராமத்தில் 61 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்திடம் மனு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் தயா. தமிழன்பன், நிரவாகிகள் கடலூர் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், கடலூர் நகர செயலாளர் செந்தில், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு, கடலூர் ஒன்றிய செயலாளர் கலைஞர், ஆறுமுகம், அர்ஜுனன், ராஜ்குமார், ஜெயக்குமார்

செங்கதிர், சலீம், வேல்முருகன், சேகர் உளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உடனடியாக ஏழை மக்களுக்கு இலவச மனப்பட்டா கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Related Stories: