சைமா’ சங்க தேர்தல் அலுவலர் நியமனம்

திருப்பூர்,  செப்.13: திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்கத்தின்  அவசர செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர்  ஈஸ்வரன் தலைமை வகித்தார். துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், செயற்குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தில் உள்ள ஆறு நிர்வாகிகள் மற்றும்  20 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 2022-25ம் ஆண்டு பதவிக்காலத்துக்கான  தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில்,  தேர்தலுக்கான அதிகாரியாக வக்கீல் ராமமூர்த்தியை நியமிப்பது. அவருக்கு  இதுகுறித்து அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்புவது. கடந்த 7ம் தேதிக்கு பின்  வந்த சந்தா விவரங்களை செயற்குழு பரிசீலிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: