ஆண்டிபட்டியில் அச்சுறுத்தும் தெருநாய்கள்

ஆண்டிபட்டி, செப். 3: ஆண்டிபட்டியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டியில் உள்ள வீதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றது. இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி வந்து கடிக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் வெளியே ெசல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சாலையிலும் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதினால் வாகன ஓட்டிகள் பெரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. சில நாய்கள் நோயுடன் திரிவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: