தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

சேலம், ஆக. 11: சேலத்தில் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் லைன்மேடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சிவ(16). அங்குள்ள உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 8ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவ, சீலநாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவயின் உடல்நிலை மோசமானதையடுத்து, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, மாணவியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறி, அவரது உறவினர்கள் திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், சேலம்-திருச்சி சாலையில் அமர்ந்து சில நிமிடங்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: