அரசு அருங்காட்சியகத்தில் ஆக.14ல் மாணவர்களுக்கு மாறுவேட போட்டி 1 முதல் 8 வரை படிப்போர் பங்கேற்கலாம்

விருதுநகர், ஆக. 10: விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஆக.14ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி நடக்கிறது. இதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிப்போர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாறுவேட போட்டி ஆக.14 காலை 10 மணி அளவில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. மாறுவேடப்பேட்டியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்கள் பங்கேற்கலாம்.

1 முதல் 3ம் வகுப்பு வரை ஒரு பிரிவாக, 4 மற்றும் 5 வகுப்புகள் ஒரு பிரிவு, 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாக போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் மாணவர்கள் ஒரு விடுதலை போராட்ட வீரரை சித்தரிக்கும் வகையில் உடை அணிந்து போட்டியில் பங்கேற்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆக.14 பகல் 12.30 மணிக்கு பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பெயர்களை காப்பாட்சியர், அரசு அருங்காட்சியம், விருதுநகர் என்ற முகவரில் நேரிலோ அல்லது தபாலிலோ, மின்னஞ்சல் மூலம் 12ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மின்னஞ்சல் முகவரி krishcurator@gmail.com கூடுதல் தகவல்களுக்கு செல் 9443671084 செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: