சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்

மேலூர், ஆக. 10: மேலூரில் சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் காந்தி, கக்கன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நடை பயணம் மேற்கொண்டனர். மேலூர் அருகே கீழையூரில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று மாலை அணிவிக்கப்பட்டது. பின் அங்கிருந்து மேலூருக்கு 7 கிமீ. தூரம் நடைபயணம் செல்ல காங்கிரஸ் கட்சியினர் முயன்றனர். மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி அவர்களை தடுத்து, நடைபயணத்திற்கு போதிய பாதுகாப்பு தர முடியாது கூறி உள்ளார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர் ரோட்டோரமாக அமர்ந்து தர்ணா செய்தனர்.

பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் மேலூர் செக்போஸ்டில் உள்ள கலைக் கல்லூரி முன்பு இருந்து 2 கிமீ., தூரத்திற்கு நடைபயணம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். கலை கல்லூரி முன்பு இருந்து நடைபயணம் மேற்கொண்ட கட்சியினர் செக்கடியில் உள்ள கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து கலைந்து சென்றனர். நடை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் பொது குழு உறுப்பினர்கள் திலகராஜ், பிஸ்மி நூர்முகமது, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலப்பிரிவு முருகன், மாவட்ட மகளிர் அணி செல்லப்பா சரவணா, துணை தலைவர் மூர்த்தி, இளைஞரணி தலைவர் ராமசுந்தரம், அசோகன், நகர் தலைவர் மகாதேவன், வக்கீல் துரைபாண்டியன், சுண்ணாம்பூர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: