முன்னாள் மாணவ,மாணவிகள் சந்திப்பு

நாமக்கல், ஆக. 8: நாமக்கல்லில் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில்  படித்த முன்னாள் மாணவ, மாணவியர் 37 ஆண்டுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி கோட்டை உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1985ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி 37 ஆண்டுக்கு பிறகு நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது.முன்னாள் மாணவ, மாணவியர் பல வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர். படிக்கும்போது இருந்த பள்ளியின் தோற்றம் தற்போது மாறியிருந்தாலும், தாங்கள் படித்த வகுப்பில் அமர்ந்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.

முன்னாள் ஆசிரிய, ஆசிரியைகளையும் சந்தித்து கவுரவித்தனர். பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் அவர்கள் வழங்கினார்கள். முன்னாள் மாணவ, மாணவியரை கண்டுபிடித்து, வாட்ஸ் அப்குழுவில் இணைந்த முன்னாள் மாணவர் நிக்கல்சன் எட்வர்ட்டுக்கு சக மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் நிக்கல்சன், செல்வம், சுப்ரமணி, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: