எமனேஸ்வரத்தில் ஆக.7ல் 8வது தேசிய கைத்தறி தினம்

ராமநாதபுரம், ஆக.4:  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களின் பாரம்பரியம், தொன்மை, தனித்தன்மை மற்றும் சிறப்பு ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆக.7ல் எமனேஸ்வரம் சவுராஷ்ட்ரா சபை பேரவை அரங்கில் 8வது தேசிய கைத்தறி தினம் கலெக்டர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இத்தினத்தை கொண்டாடும் விதமாக பரமக்குடி எமனேஸ்வரம் சுற்றுவட்டார நெசவாளர்களின் நலன் கருதி பொது மருத்துவ முகாம், நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

Related Stories: