குறைதீர் மன்ற உறுப்பினர் பணிக்கு விண்ணப்பம்

சிவகங்கை, ஜூன் 25: சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்ற இரண்டாவது உறுப்பினர் காலிப்பணியிடத்திற்கு தகுதியான(பதிவு பெற்ற அரசு சாரா நிறுவனம் அல்லது நுகர்வோர் அமைப்பு அல்லது முனைந்து செயல்படும் ஒரு நுகர்வோர்) நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் கிடைக்க செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: