தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்

நாகை,ஜூன்25: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார் ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி இலக்கை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடை செய்யும் குறுவை நெல்களை தடையில்லாமல் கொள்முதல் செய்ய இரண்டு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார் கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடம், புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைய வேண்டிய இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன்பின்னர் விவசாயிகளுடன் நேரடியாக பேசி கலந்தாய்வு செய்தார். அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை தேக்கம் இன்றி கொள்முதல் செய்வது. நெல் கொள்முதல் செய்வதற்கு தேவையான சாக்குகள் இருப்பு வைத்து கொள்வது.

கொள்முதல் செய்த நெல்லை சேமித்து வைக்க தேவையான சேமிப்பு கிடங்குகளை ஏற்படுத்துவது, நெல் மூட்டைகளை தேக்கம் இன்றி இயக்கம் செய்ய தேவையான வாகன வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து விவசாயிகளிடம் பேசினார்.

Related Stories: