ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நாமக்கல், ஜூன் 11: நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், குமாரபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் தாமோதரன், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடத்தி வந்த 22 சாக்கு மூட்டையில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து தாமோதரன் கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக, தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்திய நபர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 7000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: