அரசு மகளிர் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தமிழ்நாடு உயர்கல்வி மன்ற நிதி உதவியுடன், வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி 10 நாட்கள் நடந்தது. நிறைவு விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரி மேங்கோ ஜேசிஐ தலைவருமான நந்தகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில், பன்னாட்டு நிறுவனங்களான விப்ரோ, எச்.சி.எல்., மற்றும் ஜே.சி.ஐ., ரோட்டரி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள் உட்பட 120 பேர் கலந்து கொண்டு 562 மணி நேரம் மூன்றாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கினர். துறை தலைவர்கள் லாவண்யா, கல்பனா, உமா, ஜெயந்தி, சிவகாமி, வள்ளி சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவுரவ விரிவுரையாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

Related Stories: