சூதாடிய 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.விருதுநகர் அருகே தனியார் சிமிண்ட் ஆலை எதிர்புறம் மேம்பாலம் அருகில் முள்வேலியில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த இருக்கன்குடி ஜெயக்குமார்(31), ஒத்தையால் கண்ணன்(45), மேலகாந்திநகர் மாசிலாமணி(50), படந்தால் சிங்கராஜ்(48) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: