ஏழு கரக மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூர், ஜூன் 6: கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாங்குப்பத்தில் ஏழு கரக மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதற்காக கோயிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மேலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று, நவக்கிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் முதல் கால யாகசாலை பூஜை, அங்குரார்ப்பணமும், மங்கள வாத்தியங்கள் முழங்க கும்ப அலங்காரம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர் கோ பூஜை, தத்வார்ச்சனை, நாடி சந்தனம். மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலஸ்தானம் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மாறன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா சம்பத், ஊர் முக்கியஸ்தர்கள் ராஜா, ராஜேந்திரன், சிலம்பரசன் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: