ராஜ்யசபா எம்பி பதவி தச்சை கணேசராஜா புதிய தகவல்

நெல்லை, மே 28: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு 2 ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்பாளர்கள் தேர்வு கட்சித் தலைமையால் தீவிரமாக நடந்தது. ராஜ்யசபா எம்பி பதவிக்கு நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பெயரும் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அவரும் இதற்காக கட்சித் தலைமையை அணுகி முகாமிட்டிருந்தார். எனினும் கடைசி நேரத்தில் சிவி சண்முகம், தர்மர் ஆகிய இருவரும் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ளதாகவும், பாளை. தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 1977ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி கல்வி பயின்றதாகவும், ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்படாததற்கு கல்வித்தகுதி காரணமில்லை எனவும் தச்சை கணேசராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: