சேலம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு

சேலம், மே 27: மாவட்டத்தில் ரயில்வே மேம்பால பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு இடங்களில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தவகையில், நெடுஞ்சாலைதுறையினர் சாலை மற்றும் மேம்பால  திட்டப்பணிகளை கடந்த 17ம் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்டத்தில் சங்ககிரி- எடப்பாடி சாலையில் ஜேஎஸ்டபுள்யூ- இரும்பாலை, சூரமங்கலம்-ஓமலூர் சாலையில் முத்துநாயக்கன்பட்டி அருகே நடக்கும் மேம்பால பணிகளை கோவை நெடுஞ்சாலை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்ட கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் தலைமையில் உள் தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முடிவுற்ற சாலைகளுக்கு அணுகுசாலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்குமாறும், நிலஎடுப்பு பணிகளை விரைந்து முடித்து சேவைச்சாலை அமைக்குமாறும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் பாலத்தின் உறுதித்தன்மை, நீளம், அகலம் மற்றும் சாலையின் தடிமன் மற்றும் கலவை பணிகளின் தரம் மற்றும் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கோட்டப்பொறியாளர்கள் வத்சலா, வித்யானந்தி, மாதேஸ்வரன் மற்றும் உதவி கோட்டப்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள் மற்றும் உள் தணிக்கைக்குழு பொறியாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: