வடக்கு போலீஸ் நிலைய எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு

திருப்பூர், மே 24: திருப்பூர், ராக்கியாபாளையம், ஜெய்நகரை சேர்ந்த விஜயகுமார் (44) என்பவர்நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாநகர பொறுப்பாளராக உள்ளேன். உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி சட்டவிதிகளுக்கு உட்பட்டு டவுன்ஹால் பிள்ளையார் கோயில் அருகில் பிளக்ஸ் வைத்திருந்தோம்.

இதனை யாரோ அகற்றி விட்டதாக தகவல் தெரியவந்தது. இதனை கேள்விபட்டு நானும் நிர்வாகி குருபரணியும் அந்த இடத்திற்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டிருந்து. இதனை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை கோரி அறவழி போராட்டம் நடத்த முற்பட்டபோது அங்கு வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் எங்களை தகாத வார்த்தைகளில் பேசி, தாக்கி காயம் ஏற்படுத்தி மானபங்கம் செய்துவிட்டார். எனவே ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறுப்பட்டுள்ளது.

Related Stories: