கடையநல்லூர் கல்லாற்று பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித் திரியும் காட்டு யானைகள்

நெல்லை, மே 21:  கடையநல்லூர் கல்லாறுப் பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித் திரிந்த காட்டு  யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் தென்னை, வாழை, மா, நெற்பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் பீட் கல்லாறு காட்டுப்பகுதிகளில் 2 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக அப்பகுதி விவசாயிகள் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று விவசாயிகளுடன் அங்கேயே முகாமிட்டு யானைகளை வெடிவைத்தும், சைரன் ஒலித்தும் காட்டுக்குள் அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு

வருகின்றனர்.

Related Stories: