கச்சுப்பள்ளியில் திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்

இடைப்பாடி, மே 13: இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆத்மா திட்டக்குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான பரமசிவம் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு இலவச உரங்களை வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோக்ராஜன், கௌரி, வேளாண்மை உதவி இயக்குனர் சாகுல் அமீது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கச்சுப்பள்ளி அண்ணாதுரை, எருமப்பட்டி பழனிச்சாமி, மெடிக்கல் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: