திருச்செங்கோட்டில் செவிலியர் தின ஊர்வலம்

திருச்செங்கோடு, மே 13: உலக செவிலியர் தினத்தையொட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒன்று கூடி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்தை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்பு கூட்ட அரங்கில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு  முன்னாள் செவிலியர்களுக்கும், பணியில் உள்ள செவிலியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

Related Stories: