திண்டுக்கல் ஜிஹெச்சில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

திண்டுக்கல். மே 13:திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் செவிலியர் கண்காணிப்பாளர் அமுதா தலைமை வகிக்க, முதல்வர் விஜயகுமார், கண்காணிப்பாளர் வீரமணி, நிலைய மருத்துவ அதிகாரி சந்தானக் குமார் முன்னிலை வகித்தனர். விழாவில் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தொடர்ந்து செவிலியர்கள் மெழுவர்த்தி ஏந்தி, ‘ஏழு பிறவிகள் தவம் செய்து இருந்தால்தான் செவிலியராக பிறக்க முடியும். தன்னலமற்ற செவிலியர் பணியை உலகமே பாராட்டுகிறது. சாதி மதம் கடந்து மனிதநேயம் காக்கும் செவிலியர் பணியை ஏற்றிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது. இதனால் எங்கள் சேவை தொடரும்’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் அனைவரும் தங்களது பணியை தொடர்ந்தனர்.

Related Stories: