வடிகால் அமைக்கும் பணி தரகம்பட்டி அருகே சிந்தாமணிப்பட்டியில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம்

தோகைமலை, மே 11: கரூர் மாவட்டம் கடவூர் பகுதி தரகம்பட்டி அருகே சிந்தாமணிபட்டியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. தணியார் திருமண மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ லியாகத்தலி தலைமை வகித்தார். தமிழ் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறியாளர் ரவிசந்திரன், கடவூர் தாசில்தார் ராஜாமணி, குளித்தலை டிஎஸ்பி தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா வரவணை கிராமத்தில் தனியார் நிறுவனத்தினரின் சுண்ணாம்புகல் சுரங்க திட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூகஆர்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.இதில் வரவணை கிராமத்தில் தனியார் நிறுவனத்தினரின் சுண்ணாம்புகல் சுரங்க திட்டத்திற்கு சிலர் ஆதரவாகவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்தும் கருத்துகளை தெரிவித்தனர். பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் திட்டங்கள் குறித்து வெண்திறையில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளார் ராமமூர்த்தி உள்பட பல்வேறு பிரிவுகளின் விவசாய சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: