மனைவியை அடித்துக்கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூர்,மே10: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரூனாதேவி. இவர் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள காடையூர் பகுதியில் தனது கணவர் சிக்கந்தர் குமார் மண்டலுடன் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 09.12.2017 அன்று தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கந்தர் குமார் மண்டல் தாக்கியதில் ரூனாதேவி உயிரிழந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர் குமார் மண்டலை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.  நீதிபதி நாகராஜ் வழக்கை விசாரித்து ரூனாதேவியை கொலை செய்த சிக்கந்தர் குமார் மண்டலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் சிக்கந்தர் குமார் மண்டலை போலீசார் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Related Stories: