ஊட்டி, மே 3: சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஊட்டி - குன்னூர் இடையே கோடை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலத்தில் பல மடங்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாரம்பரியம் மிக்க மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆண்டு தோறும் ரயில்வே நிர்வாகம் ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்குவது வழக்கம்.