தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய சூட்டிங்மட்டம்

ஊட்டி, ஏப்.28: கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக சூட்டிங் மட்டத்தில் பசுமை திரும்பியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு மட்டும் செல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் சூட்டிங்மட்டம் மற்றும் பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கும் செல்கின்றனர்.ஊட்டி அருகேயுள்ள சூட்டிங்மட்டம் பகுதியில் உள்ள புல் மலைகள் பனி மற்றும் வெயிலால் கடந்த மாதம் பழுப்பு நிறமாக மாறியது. ஆனால், இம்முறை கடந்த வாரம் சில தினங்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், சூட்டிங்மட்டம் பகுதியில் உள்ள அனைத்து மலைகளில் தற்போது பச்சை நிறம் திரும்பியுள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பசுமை நிறைந்த மலைகளின் நடுவே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: