குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா

குன்னூர், ஏப்.23:  நீலகிரி மாவட்டம், குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் ஒரு உபயதாரர் கொண்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ேநற்று குன்னூர் பகுதியில் வசிக்கும் மலையாள மக்கள் 77வது ஆண்டு முத்துப்பல்லக்கு திருவிழாவையாட்டி செண்டை மேளம் முழங்க, குடைகள் சூழ பெண்கள் சீர்வரிசை தட்டு எடுத்து வந்தனர். இதில், ஆடல் பாடல்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தாண்டு முத்துப்பல்லக்கை சிறப்பிக்கும் விதமாக தத்ரூபமான கடவுள் வேடமணிந்து வீதியில் ஊர்வலம், உலக்கை நடனம், பஞ்சவாத்தியம் ஆகியவை இடம் பெற்றன. பின்பு இரவில் நடைபெற்ற ஊர்வலத்தில் வண்ண ஒளியில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு முழுவதும் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சி உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. மலையாள திருவிழா என்பதால், நீலகிரி மட்டுமின்றி, கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர்.

Related Stories: