கோவை, ஏப்.21: கோவை கோவில்பாளையம் சக்தி சாலையில் அமைந்துள்ள கேஎம்சிஎச் கோவில்பாளையம் மருத்துவ மையத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரும் 24ம் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ள இம்முகாமில், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம் (மூளை மற்றும் தண்டுவடம்), நுரையீரல் மருத்துவம், எலும்புமுறிவு மற்றும் மூட்டு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் இலவச ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.